திருமணமான 30 நாட்களில் இரட்டைக் கொலையில் முடிந்த காதல் கதை!!

556

கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம், கொக்கடனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 19 வயதான ஹீனா கவுசர். இவர், 24 வயதான தௌஃபிக் காடியை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், 4 மாதங்களுக்கு முன் அவரை திருமணம் செய்து கொண்டார்.

அதன் பின்னர், நர்சிங் கல்லூரியில் சேர்ந்து படித்த ஹீனாவிற்கு, அவரது கணவரின் நண்பரான யாசின்-பகோட்டின் நட்பு கிடைத்துள்ளது. யாசினின் இன்ஸ்டா பக்கத்தை பாலோ செய்த ஹீனா, அவரது கலர்ஃபுல் ரீல்ஸ்களை பார்த்து, அரட்டை அடிக்க ஆரம்பித்துள்ளார்.

அப்போது தெளஃபிக்கிற்கு தெரியாமல்போனது, நண்பனே தனது குடும்ப வாழ்க்கையில் கும்மி அடிக்க போகிறார் என்று. ஹீனாவும், யாசினும் செல்போன் எண்களை ஷேர் செய்து நண்பர்களாக பழக, நாளடைவில் அது தகாத உறவாக உருவெடுத்துள்ளது.

இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து, கதை பேசியதாக கூறப்படுகிறது. அதுதொடர்பாக தௌஃபிக்கிற்கு தெரியவர, மனைவியையும் – நண்பனையும் அழைத்து கண்டித்திருக்கிறார். இருவரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள், வீடும் 500 மீட்டர் தூரத்தில் இருந்ததால், ரகசிய ஜோடியின் சீக்ரெட் காதலுக்கு தடை போட முடியவில்லை.

புதுமோகம் கண்ணை மட்டுமல்லாது கண்டதையும் மறைக்க, வீட்டை விட்டு வெளியேறிய ஹீனா, புதுக்காதலன் யாசினும் சிட்டாக பறந்திருக்கிறார். 20 நாட்கள் தலைமறைவாக குடும்பம் நடத்தியவர்கள், ஊர் பெரியவர்களிடம் பேசி மீண்டும் திரும்பினர்.

ஜமாத்தில் மூன்று பேரை அழைத்து சமரசம் செய்தபோது ஹீனா, யாசினுடன் செல்வதாக திட்டவட்டமாக கூறினார். அப்போது மன உடைந்து போன தௌஃபிக், இருவரின் காதலுக்கும் தடையாக இருக்க மாட்டேன் எனக்கூறிய தலாக் கொடுத்துவிடுகிறேன் என்று கூறியுள்ளார்.

பின்னர் யாசின் மற்றும் ஹீனா இருவரும் பெரியவர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். அப்போது இவர்களுக்கு தெரியாமல் போனது, இருவரின் உயிருக்கும் தௌஃபிக் எமனாக வரப்போகிறார் என்று.

புதுஜோடி இருவரும் ஒரு மாதமாக, கொக்கடனூர் கிராமத்தின் புறநகரில் உள்ள ஜாதவ் பண்ணையில் வசித்து வந்தனர். அப்போதுதான் கிராமத்தில் யல்லம்மா தேவியின் திருவிழா நடைபெற்றது. அதில் முன்னாள் கணவர் தௌஃபிக்-கும், ஹீனாவும் நேருக்கு நேர் சந்தித்து கொண்டனர்.

‘உன்னை விட, யாசின் என்னை நன்றாக பார்த்து கொள்கிறான், நான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று தெரியுமா’?, எனக்கூறி தௌஃபிக்-கை சூடேற்றி இருக்கிறார்.

சும்மா இருந்த சங்கை ஊதியே உடைத்த புதுக்கதையாய், ஹுனாவின் வார்த்தைகள் தௌஃபிக்-கை ஆத்திரக்காரனாக மாற்றியது. கையில் அரிவாளுடன் புறப்பட்டு சென்றவர், ஹீனாவின் வீடு புகுந்து ஆக்ரோஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஹீனா, அவரது புது கணவன் யாசின் ஆகிய இருவரையும் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். சம்பவத்தை தடுக்க முயன்ற யாசினின் தாய் அமினாபாய் மற்றும் உறவினர் முஸ்தபா ஆகிய இருவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

குலை நடுங்க வைக்கும் இச்சம்பவம் தொடர்பாக தகவலறிந்து வந்த போலீசார், கொலை செய்யப்பட்ட இருவரின் உடல்களையும், உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த யாசினின் தாய் மற்றும் உறவினரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதை அடுத்து, இரட்டை கொலை தொடர்பாக வழக்குப்பதிந்த போலீசார், தலைமறைவாக இருந்த தௌஃபிக்-கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருமணமான 30 நாட்களில் புதுமோகத்தால் வீட்டை விட்டு ஓடிய மனைவி மற்றும் அவரது காதலன் இருவரையும் முன்னாள் கணவன் அரிவாளால் வெட்டி கொன்ற சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.