வானும் காரும் மோதி விபத்து : 7 பேர் படுகாயம்!!

1268

திஸ்ஸ – மாத்தறை பிரதான வீதியின் ஹூங்கம பகுதியில் காரும் வானும் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து நேற்று (04.02.2024) இடம்பெற்றுள்ளது.


பேருந்து ஒன்றை வான் கடக்க முற்பட்ட போது எதிரே வந்த கார் மீது வான் மோதியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை விபத்தின் போது காரில் இருந்த 5 பேர் மற்றும் வானில் பயணம் செய்த இருவர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


விபத்தில் காயமடைந்த 7 பேர் தங்காலை, அங்குனுகொலபெலஸ்ஸ மற்றும் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இவர்கள் தங்காலை மற்றும் ஹூங்கம பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹூங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.