முல்லைத்தீவில் வேக கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்து!!

1203


முல்லைத்தீவு – விசுவமடு பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து நேற்று (05.02.2024) மாலை இடம்பெற்றுள்ளது.முல்லைத்தீவு, பரந்தன் A35 பிரதான விதி ஊடாக புதுகுடியிருப்பு பகுதியில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த கார் விசுவமடு பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றை முந்தி செல்ல முற்பட்டுள்ளது.

இதன்போது வேக கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் இருந்த கடையின் முன்பகுதியில் பொருட்கள் கொள்வனவு செய்வதற்கு வந்த வாடிக்கையாளர்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள், துவிச்சக்கரவண்டி மற்றும் முச்சக்கரவண்டி என்பனவற்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் இவ்விபத்தில் எவருக்கும் எந்த வித ஆபத்தும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் விபத்தில் சேதமடைந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் துவிச்சக்கர வண்டியையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.


மேலும் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.