இலங்கையில் 3 கோடி பெறுமதியான திமிங்கில வாந்தியுடன் சிக்கிய மூவர்!!

903


இலங்கையில் விற்பனை செய்யவோ அல்லது வியாபாரம் செய்யவோ தடை செய்யப்பட்ட 4 கிலோ 500 கிராம் அம்பர் எனப்படும் திமிங்கிலத்தின் வாந்தியை சட்டவிரோதமான முறையில் விற்பனை முயன்ற மூவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலுக்கு அமைய, தெவிநுவர மற்றும் நகுலுகமுவ பிரதேசத்தில் வைத்து மிரிஸ்ஸ குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொண்டேரோ ரக ஜீப் வண்டியில் பயணித்த போதே கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 25-30 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

கைப்பற்றப்பட்ட ஆம்பரின் சந்தை மதிப்பு 3 கோடி ரூபாயாகும். ஆம்பர் என்பது திமிங்கலத்தின் உடலில் இருந்து இயற்கையாக வெளியாகும் (Sperm Whale) விந்து மற்றும் வாந்தியாகும்.


இது வாசனைத் திரவியங்களுக்கும், வாசனைத் திரவியங்களின் நறுமணத்தை நீண்ட காலம் பராமரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு வெளிநாடுகளில் அதிக கிராக்கி நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.