வவுனியாவில் வடமாகாண மக்களுக்காக 107 எனும் தமிழ் மொழி மூல அவசர அழைப்பு சேவை

1468

வவுனியாவில் வடமாகாண மக்களுக்காக….

வடமாகாண மக்கள் முறைப்பாடுகள் , போதைப்பொருள் போன்ற தகவல்களை தமிழ் மொழி மூலம் வழங்குவதற்காக 107 எனும் தமிழ் மொழி மூல அவசர அழைப்பு சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் அவர்களின் என்னக்கருவில் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இச் சேவையின் 107 அவரச அழைப்பு மத்திய நிலையம் வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தினுள் அமைக்கப்பட்டுள்ளமையுடன் எதிர்வரும் 17ம்திகதி பாதுகாப்பு அமைச்சர் , அமைச்சின் செயலாளர் ஆகியோரின் ஒத்துழைப்புடன் காரியாலயம் திறந்து வைக்கப்படவுள்ளது.

17.02.2024 ம் திகதி முதல் இவ் தமிழ் மொழி மூல அவசர அழைப்பு சேவை செயற்படுத்தப்படவுள்ளமையுடன் இதன் மூலம் மக்கள் இலகுவான முறையில் முறைப்பாடுகள் மற்றும் தகவல்களை வழங்கக்கூடியதாகவிருக்கும் அல்லது 107COMPLAINTSCENTER@POLICE.GOV.LK என்ற ஈமெயில் மூலமும் தகவல்களை வழங்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் போதைப்பொருள் தொடர்பில் தகவல் வழங்குபவர்களின் தகவல்கள் இரகசியமான முறையில் பாதுகாக்கப்படும் எனவும் குற்றச்செயல்கள் தொடர்பில் முறைப்பாடுகளை தெரிவிப்பவர்களின் விபரங்களும் சேமிக்கப்படாது எனவே மக்கள் தயக்கமின்றி தமிழ் மொழி மூலம் 107 எனும் இலக்கத்திற்கு அழைத்து தகவல்களை வழங்க முடியும் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.