பாடம் புரியாததால் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவன் : கதறும் பெற்றோர்!!

555

தமிழக மாவட்டம் கன்னியாகுமரியில் கல்லூரி மாணவர் ஒருவர் கணித பாடம் புரியவில்லை என தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கன்னியாகுமரியின் தக்கலை அருகே உள்ள முத்தலக்குறிச்சி அம்பலத்தடிவிளையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் அஜய் (19).
இவர் நாகர்கோவிலில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அஜய்யின் அறை கதவை அவரது தாய் தட்டியுள்ளார். ஆனால் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சன்னல் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது அஜய் தூக்கில் தொங்கியிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

அதன் பின்னர் சன்னல் வழியாக உள்ளே சென்று அஜயை கீழே இறக்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், அஜய்யின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் நடந்த விசாரணையில், அஜய்க்கு கணித பாடம் புரியாததால் குழப்பத்தில் இருந்ததாக தெரிய வந்துள்ளது. இது குறித்து அவர் தனது சித்தியிடம் கூறி கல்லூரிக்கு செல்ல விருப்பம் இல்லை என்று கூறியுள்ளார்.

ஆனால் இந்த விடயம் வெளிநாட்டில் இருக்கும் தந்தைக்கு தெரிந்தால் கோபப்படுவார் என்று பயந்து அஜய் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.