இலங்கையில் பொலிஸாரை தாக்கிய சீனப் பெண்!!

799

விசாரணை நடத்தச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை தாக்கிய சீனப் பெண் இன்று செவ்வாய்க்கிழமை (20.02) கைது செய்யப்பட்டதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர்.

பேருவளை மங்கள மாவத்தையில் வசிக்கும் 36 வயதுடைய சீனப் பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பேருவளை மங்கள வீதியிலுள்ள வீடு ஒன்றில் சீனப் பெண்ணொருவர் செல்லுபடியாகும் வீசா இன்றி தங்கியிருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

கிடைத்த தகவலின் அடிப்படையில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள அங்கு சென்றுள்ளனர்.

இதன்போதே அங்கு ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக பொலிஸார் மீது சீன பெண் தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பேருவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் கைதான சீன பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.