கனடாவுக்குக் கல்வி கற்கச் சென்ற இந்திய மாணவருக்கு நேர்ந்த கதி!!

713

கனடாவுக்குக் கல்வி கற்கச் சென்ற இந்திய மாணவர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள Conestoga கல்லூரியில் முதுகலைப் பட்டப்படிப்பு படித்து வந்த ஷேக் முஸாம்மில் அஹமது என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஹைதராபாதைச் சேர்ந்த குறித்த மாணவருக்கு கடந்த வாரம் காய்ச்சல் ஏற்பட்டு அவதியுற்று வந்த நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக அவரது நண்பர்களில் ஒருவர் இந்தியாவிலிருக்கும் ஷேக்கின் பெற்றோருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மகனுடைய மரணச் செய்தி கேட்டு ஷேக்கின் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ள தோடு, தங்கள் மகனுடைய உடலை இந்தியா கொண்டு வர உதவுமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரான ஜெய்ஷங்கரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.