யாழில் மயங்கி விழுந்த ஆசிரியர் உயிரிழப்பு : அதிர்ச்சிக் காரணம்!!

3161

யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி ஆசிரியர் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் கோண்டாவில் பகுதியை சேர்ந்த ஞானசம்பந்தர் மில்ரன் (வயது 32) எனும் ஆசிரியரே உயிரிழந்துள்ளார். குறித்த ஆசிரியர் கடந்த வாரம் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

அதனை அடுத்து சிகிச்சைக்காக யாழ்.போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.