இலங்கையை உலுக்கிய கோர விபத்து : பெண் பரிதாபமாக உயிரிழப்பு : குழந்தையின் நிலை கவலைக்கிடம்!!

1720

தங்காலை – மாத்தறை பிரதான வீதியின் தலல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் முச்சக்கர வண்டியும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த் விபத்தில் கொட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய பெண்ணே உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
விபத்தின் போது முச்சக்கரவண்டியில் 5 பேர் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த 33 வயதான முச்சக்கரவண்டி சாரதி, 15 வயது சிறுவன், 14 வயது சிறுமி மற்றும் 11 மாத குழந்தை ஆகியோர் சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்த குழந்தையின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.