உலகிலேயே மிகச்சிறிய சலவை இயந்திரத்தை உருவாகிய நபர்!!

683

உலகிலேயே மிகச்சிறிய சலவை இயந்திரம் ஒன்றை உருவாக்கி இந்தியாவை சேர்ந்த நபரொருவர் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

குறித்த இந்த கின்னஸ் சாதனை தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இந்தியாவில் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த சாய் திருமலாநீதி என்பவர் உலகிலேயே மிகச்சிறிய சலவை இயந்திரத்தை (Washing Machine) உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

அது தொடர்பான காணொளியும் இணையத்தில் வைரலாகி வருகிறது. காணொளியில், Washing Machine-யை சாய் திருமலாநீதி உருவாக்கும் செயல்முறை காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

சுவிட்ச் மற்றும் ஒரு சிறிய பைப் உள்ளிட்ட சிறிய பாகங்களை நுணுக்கமாக முறையில் பயன்படுத்தி ஒருங்கிணைக்கிறார்.
மேலும், முழுமையாக அந்த சிறிய சலவை இயந்திரம் செயல்பட தொடங்குகிறது.

பின்னர், அந்த இயந்திரத்தில் தண்ணீரை ஊற்றி பவுடரை போட்டு சிறிய துணி ஒன்றையும் போடுகிறார். சிறிது நேரத்தில் அந்த துணியை வெளியே எடுத்தபோது அது சுத்தமாக காட்சி அளிக்கிறது.