அரையிறுதியில் நெதர்லாந்து, அர்ஜென்டினா அணிகள்!!

447

Ned

பிரேசிலில் நேற்று நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து – கோஸ்டாரிகா அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் இரு அணிகளும் ஆட்ட நேர இறுதி வரை கோல் போடாததால் பெனால்டி சூட் வாய்ப்பளிக்கப்பட்டது.

இதில் நெதர்லாந்து 4-3 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிகா அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

Ar

இதேவேளை மற்றுமொரு காலிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா – பெல்ஜியம் அணிகள் மோதின. இரு அணி வீரர்களும் தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக ஆடினர். முதல் பாதி ஆட்டத்தில் அர்ஜென்டினா ஒரு கோல் அடித்தது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் போராடிய பெல்ஜியம் வீரர்கள் கடைசிவரை ஒரு கோல் கூட அடிக்கவில்லை.

ஆட்ட நேர முடிவில் அர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.