வவுனியா – வவுனேஸ்வரத்தில் நடைபெற்ற வருசாபிசேகமும் மனவாளகோலமும் : சங்காபிசேக நிறைவில் கோவில் குளத்தை குளிர்வித்த வருணபகவான்!!(படங்கள்)

450

இலங்கைத் தீவின் வடபால் ஆறாவது ஈஸ்வர தலமாக விளங்கும் வவுனேஸ்வரம் என்று போற்றப்படும் வவுனியா கோவில்குளம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் பத்தொன்பதாவது ஆண்டு நிறைவையொட்டி நிகழும் ஜெய வருடம் 21ஆம் நாள் நேற்று 05-07-2014 சனிக்கிழமை அத்த நட்சத்திரத்தில் எம்பெருமானுக்கு நாவோத்திர சகஸ்திர சங்காபிசேகமும் (1008)அம்பாளுக்கு அஷ்டோத்திர சங்காபிசேகமும்(108) ஏனைய பரிகார மூர்த்திகளுக்கு ஏககலச அபிசேகமும் நடைபெற்றது.

காலை ஒன்பது மணியளவில் தொடங்கிய சங்காபிசேகம் பிற்பகல் ஒருமணியளவில் நிறைவு பெற்றது. சங்காபிசேகத்தின் நிறைவில் சுமார் பத்து நிமிடங்களுக்கு வருணபகவான் கருணையால் மழை பெய்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

மீண்டும் மாலை ஆறு மணியளவில் வழமையான பூஜைகளுடன் ஆரம்பமாகி 6.30 மணியளவில் வசந்த மண்டபபூஜை திருஊஞ்சல் என்பவற்றின் முடிவில் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் மற்றும் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் விநாயகர் முதலியோர் உள்வீதி வெளிவீதி வலம் வந்து மணவாள கோல உற்சவம் நிறைவு பெற்றது .

-பண்டிதர்-

20 21 22 23 24 25 26 27 28 29