ஒட்டிப் பிறந்து உலகசாதனை படைத்த சகோதரர்கள்!!

619

தாய்லாந்தில் 1811ம் ஆண்டு மே மாதம் 11ம் திகதி சாங், இங்க் பங்கர் சகோதரர்கள் என்ற சகோதரர்கள் ஒட்டிப் பிறந்தனர். இவர்கள் அதிகபட்சமாக 62 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்து சாதனை படைத்தனர்.

1874ம் ஆண்டு ஜனவரி 17ம் திகதி இங்க் பங்கர் உறங்கிக்கொண்டிருந்த போது, சாங் நுரையீரல் நோயால் இறந்து விட்டார். சகோதரர் மறைவு, இங்க் பங்கரை உலுக்கியது. அடுத்த மூன்று மணி நேரத்தில் அவர் இறந்து விட்டார்.

இப்போது அமெரிக்காவில் ஓயோ மாகாணத்தில் டோனீ, ரோனீ என்ற ஒட்டிப்பிறந்த சகோதரர்கள், கூடுதல் காலம் இணைந்து வாழ்ந்து சாங்-இங்க் பங்கர் சகோதரர்களை பின்னுக்கு தள்ளி விட்டார்கள்.

டோனீ, ரோனீ சகோதரர்கள் 1951ம் ஆண்டு அக்டோபர் மாதம் 28ம் திகதி பிறந்தவர்கள். இப்போது இவர்கள் 62 வருடம், 8 மாதங்கள், 8 நாட்கள் வயதாகிறது. தற்போது உலகிலேயே அதிக காலம் வாழ்ந்து வருகிற ஒட்டிப்பிறந்த இரட்டையர் என்ற பெயரை பெற்றுள்ளனர். இதை நேற்று அவர்கள் கோலாகலமாக கொண்டாடினர்.

உலகிலேயே அதிக காலம் வாழ்ந்து மறைந்த இத்தாலியின் ஜியாக்கோமா, ஜியாபானீ சகோதரர்களின் சாதனையை முறியடித்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்க வேண்டும் என்பது இரட்டையர்களின் இலட்சியமாகும்.

T1 T2 T3 T4