ரயிலில் நிர்வாணமாக பயணம் செய்த நபரைப் பார்த்து அலறியடித்து ஓடிய பயணிகள்!!

725

Nude

மெட்ரோ ரயிலில் நபர் ஒருவர் நிர்வாணமாக பயணம் செய்ததால் சக பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனர்.

சீனாவின் ஷாங்காய் நகரில் இருந்து மெட்ரோ ரெயில் வேறு ஒரு நகருக்கு சென்று கொண்டு இருந்தது. ரயிலில் ஆண்களும் பெண்களுமாய் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது 41 வயது மதிக்க தக்க ஒரு நபர் திடீர் என தான் அணிந்து இருந்த ஆடைகளை ஒவ்வொன்றாக கழட்ட தொடங்கினார்.

ஒரு கட்டத்தில் நிர்வாண கோலத்திற்கு மாறி இருக்கையில் அமர்ந்து இருந்தார். இதைப்பார்த்த மற்ற பயணிகள் அலறி அடித்து அலறியடித்துக்கொண்டு அங்கிருந்து மற்ற பெட்டிக்கு ஓடியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அடுத்த ஸ்டேஷன் வந்தவுடன் ஒருவர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். காவல்துறையினர் வந்து அவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் அவரது பெயர் லிங் லூ என்றும் தட்ப வெப்ப நிலை சூடாக இருந்ததால் புழுக்கம் காரணமாக ஆடையின்றி இருந்ததாகவும் கூறியுள்ளார்.

அவரை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்வதற்கு முன்னர் அவருடைய மனநலம் குறித்து மருத்துவர்கள் சோதனை செய்தனர். மருத்துவ சோதனையில் அவர் மனநலம் நன்றாக இருப்பதாக கூறப்பட்டது.

சீனாவில் பொது இடத்தில் நிர்வாணமாக இருப்பது கடுமையான குற்றம் எனவே அவருக்கு கடுமையான தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.