வகுப்பறையில் ஆசிரியரை கத்தியால் குத்திக் கொன்ற மாணவனின் தாய்!!

809

Knif

பிரான்சில் பள்ளி வகுப்பறையில் ஒரு மாணவனின் தாய், ஆசிரியையை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு பிரான்சில் உள்ள அல்பி என்ற நகரில் உள்ள தொடக்கப் பள்ளி ஒன்றில் ஒரு மாணவனுடன், அவனது தாயும் பள்ளிக்கு வந்துள்ளார்.

அவர் தன் மகன் படிக்கும் வகுப்பறைக்குள் சென்று, சிறிது நேரத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆசிரியையை குத்தியுள்ளார். இதனால் பலத்த காயம் அடைந்த அந்த ஆசிரியை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, கத்தியால் குத்திய பெண் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இச்சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க கல்வித்துறை மந்திரிக்கு பிரான்ஸ் அதிபர் ஹொலாண்டே உத்தரவிட்டுள்ளார்.