அவுஸ்திரேலியா சென்ற இலங்கை அகதிகள் 41 பேர் இலங்கை கடற்படையிடம் ஒப்படைப்பு!!

347

Aus

அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற இலங்கை அகதிகள் 41 பேர் இலங்கையிடம் கையளிக்கப்பட்ட சம்பவத்தை அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.

அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் ஸ்கொட் மொரிசன் இன்று (07.07) வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் அவர் இச்சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் அவுஸ்திரேலியா சென்ற இந்த அகதிகள் நேற்று இலங்கையிடம் கையளிக்கப்படடுள்ளனர். இவர்களில் 37 பேர் சிங்களவர்கள் என்றும் ஏனைய நால்வர் தமிழர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவர்கள் குடிவரவு பரிசோதனை நடவடிக்கைகளின் போது பொருளாதார அகதிகள் என்று இனங்காணப்பட்டதாகவும் மொரிசன் கூறியுள்ளார்.

எனினும் கடந்த வாரங்களில் அவுஸ்திரேலிய கடலில் இடைமறிக்கப்பட்ட இரண்டு படகுகளில் இருந்த மேலும் 200 பேர் தொடர்பில் மொரிசன் தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட 41 அகதிகளையும் மட்டக்களப்பு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.