இராணுவத்தினரிடமிருந்து தப்பிக்க தாடியை வெட்டும் தலீபான்கள்!!

516

பாகிஸ்தான் இராணுவத்தினரிடமிருந்து தப்பிக்க தலீபான்கள் தங்களது சிகையலங்காரத்தை மாற்றி கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் பாகிஸ்தானின் வடக்கு வஹ்ஜிரிஸ்தான் பகுதியில் தலிபான்களுக்கு எதிராக அந்நாட்டு இராணுவம் தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தது.

ஆனால் இதற்கு முன்னதாகவே நூற்றுக்கணக்கான தலீபான்கள் தங்களது தாடியின் நீளத்தை குறைத்துகொண்டு அடையாளத்தை மறைக்க முயன்றதாக அப்பகுதியிலிருந்து தப்பி வந்த அகதிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அந்தப் பகுதியின் முக்கிய நகரமான மிரான்ஷாவிலிருந்து வெளிவந்தவர்களில் அஸம் கான் என்ற தலீபான்களுக்கு முடிதிருத்தம் செய்யும் நபர் கூறியதாவது, வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக, எனக்கு நல்ல வருமானம் கிடைத்து வந்தது.

தினமும் ஏராளமான தலிபான்கள் என் கடைக்கு வந்து, அவர்களது தனி அடையாளமாய் திகழும் நீளமான தாடியை குறைக்கச் சொல்வார்கள்.

மேலும் தெஹ்ரீக்-இ-தலிபான் தலைவர் ஹெக்முல்லா மெஷூதைப் போலவே சிகையலங்காரம் வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கும் அவர்கள், ராணுவம் தாக்குதல் தொடுக்க திட்டமிட்டிருப்பதை அறிந்ததும் முடியை ஒட்ட வெட்டும்படி வலியுறுத்தினார்கள் என கூறியுள்ளார்.

T1 T2