81 வயதில் இடம்மாறிய கர்ப்பம் : அறுவை சிகிச்சையை எதிர்கொண்ட மூதாட்டி!!

681

இடம்மாறிய கர்ப்பத்தினால் 81 வயதில் அறுவை சிகிச்சையை எதிர்கொண்ட மூதாட்டி ஒருவர் சிகிச்சையின் பின்னர் அவருக்கு ஏற்பட்ட தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக தெரிய வருகையில், பிரேசில் நாட்டைச் சேர்ந்த 81 வயதான டேனிலா வேரா என்பவருக்கு திடீரென அடிவயிற்றில் பயங்கர வலி ஏற்பட்டுள்ளது.

சிகிச்கைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட டேனிலாவுக்கு 3டி ஸ்கேன் எடுத்ததில் அவரது அடி வயிற்றுப் பகுதியில் இறந்த குழந்தை இருப்பது தெரியவந்துள்ளது.

டெனிலாவுக்கு, கரு கர்ப்பப்பையில் உண்டாகாமல், கருப்பைக்கு வெளியில் உண்டாகியுள்ளது. இது இடம்மாறிய கர்ப்பம் (Ectopic pregnancy) எனப்படுகிறது.

டேனிலா முதன் முதலாக கருவுற்றிருந்தபோது இந்த இடம் மாறிய கர்ப்பம் ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. கருப்பையை விட்டு வெளியே வளரும் கருவானது, போதிய வளர்ச்சியின்றி இறந்துவிடும். இறந்த கருவானது சில நாட்களில் கல் குழந்தையாக மாறிவிடும்.

அத்துடன், இதற்கு முன்பு அவர் ஏழு குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். ஆனால் அதன்பிறகு அவர் வயிற்றில் இன்னொரு இறந்த கரு இருப்பதை அறியாமல் வாழ்ந்து வந்துள்ளார்.

சிறுநீர் பாதை நோய்த்தொற்று சிகிச்சைக்காக முதலில் அவரது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு சிறிய மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்டார்.

இவ்வாறிருக்க, 56 வருடங்களாக வயிற்றிலிருந்த கல் குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் வைத்தியர்கள் நீக்கியுள்ளனர். ஆனால், அவருக்கு ஏற்பட்ட தொற்றின் காரணமாக அவர் உயிரிழந்துள்ளார். இந்த அபூர்வ ‘கல் குழந்தை’ மூதாட்டியின் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்டு ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.