வலி தாங்க முடியாமல் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்த மூதாட்டி!

547

Old Lady

பிரித்தானியாவில் மூதாட்டி ஒருவர் விசித்திரமான நோயால் பாதிக்கப்பட்டிருந்ததால் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பிரித்தானியாவின் பிளாக்பூல் ஜனத் வார்பர்டன் (58) என்ற மூதாட்டி ஐந்து வருடங்களாக ட்ரைஜெமினல் நியுரல்ஜியா என்ற நோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார்.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முகத்தில் உள்ள நரம்புகள் வெடிப்பது போல வலிக்கும். மேலும் இதனை தற்கொலை நோய் என குறிப்பிடுவார்கள். இந்நிலையில், இந்த வலி தாங்க முடியாமல் மாடியில், இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து இவரது சகோதரி கரோல் கூறுகையில், வலி அதிகமாக இருந்ததால் இந்த முடிவினை எடுத்துள்ளார் என்றும் வலியை கட்டுப்படுத்தும் மாத்திரைகள் கிடைத்திருந்தால் அவர் தற்போது வாழ்ந்திருக்க கூடும் என தெரிவித்துள்ளார்.