ஆசிரியையை பாலியல் பலாத்காரம் செய்து காணொளி எடுத்து மிரட்டிய மாணவர்கள்!!

601

Abuse

உத்திர பிரதேசத்தில் ஆசிரியை ஒருவரை பலாத்காரம் செய்து அதை காணொளி எடுத்து மிரட்டிய கல்லூரி மாணவர்கள் மூவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

முசாபர்நகர் மாவட்டம் பல்வாகரி கிராமத்தைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அவர் வீடு வீடாக சென்று பெற்றோரிடம் குழந்தைகளை பள்ளியில் சேர்க்குமாறு கூறியுள்ளார்.

அப்போது கல்லூரி மாணவர் மோஹித் என்பவர் பின்புறமாக வந்து ஆசிரியையின் வாயை பொத்தி அவரை யாரும் இல்லாத வீட்டுக்கு இழுத்துச் சென்று, நண்பர்கள் முன்னிலையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அதை அவரது நண்பர்கள் கைப்பேசி மூலம் காணொளி எடுத்துள்ளனர். நடந்ததை வெளியே யாரிடமும் கூறாதே என்று மிரட்டியுள்ளனர்.

பின்னர் அந்த ஆசிரியை தனது பெற்றோரிடம் நடந்தவற்றை தெரிவிக்க அவர்கள் பொலிசில் புகார் கொடுத்துள்ளனர். மேலும், இந்த புகாரை அடுத்து, வழக்குப்பதிவு செய்த பொலிசார் அந்த 3 மாணவர்களையும் கைது செய்துள்ளனர்.