திருமணம் செய்வதாக கூறி இணையத்தளம் மூலம் யுவதியிடம் பண மோசடி செய்த குற்றவாளிக்கு பொலிஸார் வலைவிரிப்பு!!

280

internet

இணையத்தளம் மூலமாக ஏற்படுத்தி கொண்ட நம்பிக்கையின் அடிப்படையில் திருமணம் செய்வதாக உறுதியளித்து பணமோசடியில் ஈடுபட்ட நபரொருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

சுமார் 5 லட்சம் ரூபாவை பெற்று மோசடி செய்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபரை கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மாத்தறை மிரிஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த யுவதி ஒருவரே இவ்வாறு பணத்தை இழந்துள்ளார்.

திருமண சேவை நிறுவனம் ஒன்றில் வெளியிடப்பட்ட மணமகன் தேவை என்ற விளம்பரத்தில் இருந்த தகவல்களை பயன்படுத்தி யுவதியுடன் ஸ்கைப் மற்றும் மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொண்டு திருமணம் செய்து கொள்வதாக சந்தேக நபர் உறுதியளித்துள்ளார்.

பிரீதிவிராஜ் அமரசிங்க என்ற இந்த நபர் மலேசியாவில் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பெண்ணொருவருக்கு பரிசொன்றை அனுப்பியுள்ளதாகவும் அதனை சுங்கத்தில் இருந்து விடுவிக்க 4 லட்சத்து 78 ஆயிரத்து 620 ஆயிரம் ரூபா பணம் தேவை எனவும் கூறி சந்தேக நபர் பணத்தை பெற்றுள்ளார்.

சம்பவம் தொடர்பில் திருகோணமலை சேருவில் பிரதேசத்தை சேர்ந்த 25 மற்றும் 35 வயதான சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரதான சந்தேக நபரை கைது செய்ய சர்வதேச பொலிஸார் ஊடாக சிகப்பு அறிக்கை பிடிவிராந்தை பிறப்பிக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் சந்தேக நபர் பல பெயர்களில் அறியப்படுவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.