கேக் சாப்பிட்ட 10 வயது சிறுமி பரிதாபமாக பலி.. பிறந்தநாளில் நடந்த சோகம்!!

1114

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஓன்லைனில் ஓர்டர் செய்யப்பட்ட கேக்கை சாப்பிட 10 வயது சிறுமி சில மணி நேரத்திலேயே உயிரிழந்தார். தற்போதைய காலத்தில் நாம் எந்தவொரு பொருள் வாங்கினாலும் அதனை ஓன்லைன் (Online) மூலமாகவே ஓர்டர் செய்து வாங்குகிறோம்.

வீட்டில் இருந்த படியே நமக்கு தேவையான பொருட்களை வாங்கும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. ஆனால், சில நேரங்களில் நடைபெறும் சம்பவங்கள் சோகத்தையும் ஏற்படுத்துகிறது.

இந்திய மாநிலமான பஞ்சாப், பாட்டியாலாவைச் சேர்ந்த 10 வயது சிறுமி மான்வி தனது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு பிறந்த நாளை கொண்டாடுவதற்காக குடும்பத்தினர் ஓன்லைன் மூலமாக கேக்கை வாங்கி இரவு 7 மணிக்கு கொண்டாடினர்.

அப்போது, அன்று இரவு 10 மணிக்கு கேக் சாப்பிட்ட மான்வி உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும் வாந்தி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவரது தாத்தா கூறும்போது, “இரவு 10 மணிக்கு மான்வி மற்றும் அவரது சகோதரிக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டது. மேலும், அவரது தாய் உலர்வதாக கூறினார்.

காலையில் மான்வியின் உடல் நிலை மோசமாக இருந்ததால் மருத்துவமனையில் சேர்த்தனர். மான்விக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டது. ஆனாலும், சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார்” என்றார். ஓன்லைன் மூலமாக ஓர்டர் செய்த கேக் கெட்டு போனதால் சிறுமிக்கு இப்படி நடந்துள்ளது என்று குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

மேலும், இது சம்பந்தமாக பேக்கரி உரிமையாளருக்கு எதிராக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த சிறுமி மான்வியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.