இறந்த சாமியாரின் உடலை 6 மாத காலமாக பாதுகாக்கும் சீடர்கள்!!

604

Samy

இந்திய பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சாமியார் ஒருவரின் உடலை அவரது சீடர்கள் 6 மாத காலமாக பாதுகாத்து வருகின்றனர்.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் ஆஸ்ரமம் நடத்தி வரும் ஸ்ரீ அஸ்தோஷ் மகாராஜ் சுவாமிகள் (70) கடந்த ஜனவரி மாதம் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். இவருக்கு கோடிகணக்கான சொத்துக்கள் உள்ளது.

இவரது மரணத்தை மருத்துவர்கள் உறுதி செய்தபோதிலும், அதை அவரது சீடர்கள் ஏற்க மறுத்ததுடன், 6 மாதங்களாக அவரை ஐஸ் பெட்டியில் வைத்துள்ளனர்.

இதுகுறித்து அவரது சீடர்கள் கூறியதாவது, அவர் இன்னும் இறக்கவில்லை, ஆழ்ந்த தூக்கத்தில் தான் உள்ளார் என்றும் மருத்துவ ரீதியாக அவர் இறந்திருந்தாலும் ஆன்மீக ரீதியாக அவர் உயிருடன் தான் இருக்கிறார் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அவரது ஆதரவாளர்களும் மருத்துவ ரீதியாக கூறும் விடயங்களை ஏற்று கொள்ள முடியாது என கூறியதுடன், அவர் பரிசுத்தமாக விரைவில் திரும்பி வருவார். அதுவரை பாதுகாப்போம் என கூறியுள்ளனர்.

மேலும் குரு இத்தகைய தெய்வீக தன்மை மூலம் மனிதனிடம் மறைந்து உள்ள ஆற்றலை எழப்பி மனித வரலாற்றில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்துவார் என் அவரது தளத்தில் தெரிவிக்கபட்டுள்ளது.

ஆனால் ஆதரவாளர்களும் சீடர்களும் அவரது சொத்துக்களை கைப்பற்ற இவ்வாறு நாடகமாடுவதாகவும், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு குருவின் உடலை எடுத்து இறுத்தி சடங்கு நடத்த ஏற்பாடு செய்யவேண்டும் என சுவாமிகளின் உறவினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.