வலி தாங்க முடியவில்லை… யாழில் விபரீத முடிவெடுத்த குடும்பஸ்தர்!!

1114

யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் கண் மற்றும் கால் வலி காரணமாக தவறான முடிவெடுத்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தில் புதிய செம்மணி வீதி, கல்வியங்காடு பகுதியை சேர்ந்த 65 வயதான கோபால் புஸ்பராசா என்ற 4 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த நபர் சில காலங்களுக்கு முன்னர் கீழே விழுந்த நிலையில் 2 கால்களிலும் சத்திரசிகிச்சை செய்யப்பட்டு கிளிப் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இவருக்கு கண் வலியும் காணப்படுகிறது.

இந்த நிலையில் 2 வலிகளும் தாங்க முடியாத நிலையில் அவரது வீட்டில் உள்ள மாட்டு கொட்டகையில் தூக்கிட்டு கொண்டுள்ளார். குறித்த நபரை அவர் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் வேளை இடையில் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.