பெங்களூருவில் தனது காதலியை பட்டப்பகலில் பொதுவெளியில் குத்தி கொலை செய்திருக்கிறார் கார் டிரைவர். கொலை செய்ததும் போலீஸ் ஸ்டேஷன் சென்று சரணடைந்து வாக்குமூலமும் கொடுத்திருக்கிறார்.
பெங்களூருவில் கால் டாக்சி ஓட்டுநராக இருக்கிறார் 35 வயதான கிரிஷ். சிரிஷ் பெங்களூரு ஜெயாநகரைச் சேர்ந்தவர். இவர் 42 வயதான மேற்கு வங்க பெண்ணான பரிதா கத்துன் என்பவரை காதலித்து வந்தார். இந்த பெண் பெங்களூருவில் இருக்கும் ஒரு ஸ்பாவில் பணி செய்துவந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், கொலை செய்த கிரிஷ் கடந்த 2011ல் அவரது தங்கைக்கு மாப்பிள்ளை கிடைக்க வேண்டும் என இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். சில வருடங்களில் தனது உண்மையான பெயரான கிரிஷ் என்கிற பெயரிலேயே சில இஸ்லாமிய பழக்கவழக்கங்களை மேற்கொண்டு இருக்கிறார்.
கிரிஷ் காதலித்த பரிதா ஏற்கனவே திருமணமானவர். இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகளும் இருக்கிறார்கள். சொந்த மாநிலமான மேற்கு வங்கம் சென்றிருந்த பரிதா கடந்த மார்ச் 26 அன்று அவரது மகள்களுடன் பெங்களூரு திரும்பினார். மார்ச் 29 கிரிஷின் பிறந்தநாளை கொண்டாட வேண்டுமெனவும் நினைத்திருக்கிறார் பரிதா.
மேலும், மூத்த மகளுக்கு கல்லூரியையும் தேடியிருக்கிறார் பரிதா. சம்பவம் நடந்த நாளன்று, பரிதா மற்றும் அவரது மகள்களை கிரிஷ் ஷாப்பிங் மற்றும் உணவு சாப்பிட அழைத்து சென்றிருக்கிறார். பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.
அன்று மாலை, ஷாலினி கிரௌண்ட்ஸ் என்கிற இடத்தில் கிரிஷ் தனது காதலை பரிதாவிடம் வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும், தன்னை திருமணம் செய்துகொள்ளும்படியும் கிரிஷ் பரிதாவிடம் கேட்டு இருக்கிறார். ஆனால், பரிதா திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.
இது இருவருக்கும் வாக்குவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உடனே ஆத்திரமடைந்த கிரிஷ் கத்தியால் பல முறை பரிதாவை குத்தி இருக்கிறார். அதில், சம்பவ இடத்திலேயே பரிதா பரிதாபமாக இறந்திருக்கிறார். கொலை செய்த கையேடு ஜெயாநகர் காவல் நிலையத்தில் சரணடைந்திருக்கிறார் கிரிஷ். அந்த வகையில், கிரிஷ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தார்கள்.
இரவு 8:30 மணியளவில் ஷாலினி கிரௌண்ட்ஸ் படியில் பெண்ணின் உடல் இருப்பதாக போலீசுக்கு அழைப்பு வந்துள்ளது. அதன்படி, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்து பரிதாவின் உடலில் இருந்த காயங்களை பார்த்தார்கள். இந்த கொலை செய்ததற்க்காக விசாரணையையும் போலீசார் மேற்கொண்டுள்ளனர்.
கிரிஷ் மற்றும் பரிதா கடந்த பாத்து ஆண்டுகளாக உறவில் இருந்திருக்கிறார்கள். ஆனால், பரிதா கிரிஷை திருமணம் செய்ய மறுத்திருக்கிறார். இதுவே கொலைக்கான காரணமாக இருக்கும் என்கிறார்கள் போலீசார்.
மேலும், சம்பவம் நடந்த இடத்திலும் இருவரும் தங்கியிருக்கும் இருப்பிடத்தில் இருப்பவர்களிடமும் விசாரணையை மேற்கொண்டு இருக்கிறார்கள் போலீசார். மேலும், இந்த கொலைக்கு பின்னால் வேறு காரணங்கள் இருக்குமா என்கிற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தொடர்புகளுக்கு 0719567890