ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற காளை அடக்கும் திருவிழா!!

494

ஸ்பெயின் நாட்டில் பாரம்பரியமாக நடைபெறும் காளை அடக்கும் திருவிழா கோலகலமாக கொண்டாடப்பட்டுள்ளது.

ஸ்பெயினின் பாம்லோனா நகரின் பலத்த எதிர்ப்புகளை மீறி காளையுடன் மல்லுக்கட்டும் போஸ் ஆல மார் என்ற காளையை அடக்கும் திருவிழா நடந்துள்ளது.

இந்த விழாவில் பாதுகாப்பு வளையங்களை மீறி தாண்டி குதித்து வந்து மக்கள் பங்கேற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பார்பதற்கு அருமையாக இந்த விழா இருந்தாலும், இதில் மக்கள் மாடுகளின் கொம்புகளில் முட்டி படுகாயமடைவது பரிதாபமாய் உள்ளது.

மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இந்த திருவிழாவில் மற்றொரு சிறப்பு அம்சமாக வைன்களை தெளித்து விளையாடி மகிழ்ந்துள்ளனர். இதற்கிடையே இந்த விழாவில் காளை மோதிய நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

11 12 13 14 15 16