நலமாக இருக்கிறேன் : நான் இறந்ததாக வதந்தி : எம்.எஸ்.பாஸ்கர்!!

506

Baskar

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடியர் மற்றும் குணசித்திர நடிகராக எம்.எஸ்.பாஸ்கர் இருக்கிறார். அவர் இறந்து போனதாக திடீர் வதந்தி பரவியது.

இணைய தளங்களில் அவரது புகைப்படத்துடன் இச்செய்தி வெளியானது. இதனால் படஉலகினர் அதிர்ச்சியடைந்தனர். எம்.எஸ்.பாஸ்கருக்கு ஏராளமானோர் போன் செய்தனர். அவர் சிரித்துக் கொண்டே நான் நலமாக இருக்கிறேன் என பதில் அளித்தார். அதன் பிறகே உறவினர்களும் ரசிகர்களும் நிம்மதி அடைந்தனர். இந்த வதந்தி குறித்து எம்.எஸ்.பாஸ்கர் கூறியதாவது..

திருமண நிகழ்ச்சியொன்றுக்கு போய் விட்டு வீட்டுக்கு வந்தேன். அப்போது உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து உறவினர்கள் ரசிகர்கள் தொடர்ச்சியாக போன் செய்தார்கள். போனில் என் குரலை கேட்டு அழுதனர். நீங்கள் இறந்து விட்டதாக இணையத்தில் செய்தி பார்த்தோம் என்றார்கள். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பேஸ்புக்கில் எம்.எஸ்.பாஸ்கர் காலமானார் என்று புகைப்படத்துடன் செய்தி இருந்தது.

இத்தகு வீண்வதந்திகளை ரசிகர்கள் நம்ப வேண்டாம். நான் எப்போதும் போலவே ஆரோக்கியமாக இருக்கிறேன். இந்த வதந்தியை பரப்புகிறவர்கள் என் வீட்டிலும் வயதானவர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி ஏதேனும் நேர்ந்து விடச் செய்யலாம் என்பதை உணர வேண்டும். ரசிகர்கள் அன்பாலும், அருளாலும், ஆதரவாலும் நன்றாக இருக்கிறேன்.

நான் நடித்த அரிமா நம்பி படம் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடுகிறது. கமலின் உத்தமவில்லன், அழகிய பாண்டிபுரம், வை ராஜா வை, எழில் இயக்கும் படம் விஜய் ஆண்டனி படம் நாகேந்திரனின் நீயெல்லாம் நல்ல வருவடா என 12 படங்களில் தற்போது நடித்து கொண்டு இருக்கிறேன்.