கிறிஸ்மஸ் தீவில் 9 பெண்கள் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக எச்சரிக்கை!!

291

Aus

அவுஸ்திரேலியா கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பெண் அகதிகளில் 9 தாய்மார் தாம் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக எச்சரித்துள்ளனர் என்று அவுஸ்திரேலிய ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும் இந்த தாய்மாரில் இலங்கையர்களும் இருக்கிறார்களா என்பது தெரியவரவில்லை. இவர்கள் 24 மணித்தியாலங்களும் ஆண் காவலர்களின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே தாய்மாரால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெண் அதிகாரிகளுக்கு வெற்றிடங்கள் உள்ள நிலையில், மலசலக்கூடம் செல்லும் போதும் குழந்தைகளுக்கு பாலூட்டும் போதும் குளிக்கும் போதும் ஆண் அதிகாரிகள் குறித்த தாய்மாரை கண்காணித்துக்கொண்டிருக்கின்றனர்.

கிறிஸ்மஸ் தீவுகளின் தூதரக அதிகாரி கோடன் தொம்ஸனின், தமது பிள்ளைகளுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்பதற்காக குறித்த தாய்மார் தியாகம் என்ற அடிப்படையில் தற்கொலை செய்துகொள்ள தயாராவதாக குறிப்பிட்டுள்ளார்.

தாம் தற்கொலை செய்துகொண்டால் அவுஸ்திரேலிய மண்ணில் பிறந்த தமது பிள்ளைகளுக்கு அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்க அனுமதி கிடைக்கும் என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது என்று தொம்ஸன் குறிப்பிட்டுள்ளார்.

இதில் ஒரு தாய்க்கு 4 வயதுக்கு குறைந்த 4 பிள்ளைகள் உள்ளனர்.
இந்தநிலையில் அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட், தம்மை பணய பயமுறுத்தல் செய்வதாகவும் தற்கொலை செய்யப் போவதாக எச்சரிக்கும் தாய்மார் குற்றம் சுமத்தியுள்ளனர்.