
பிரான்ஸ் மலைப்பகுதியில் கடந்த 32 வருடங்களுக்கு முன் காணாமல் போன வாலிபர் ஒருவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பிரான்சின் அல்பஸ் மலைப்பகுதியில் கடந்த 3ம் திகதி , மலை ஏறுவதற்கு குழுவினர் ஆர்வத்துடன் வருகை தந்திருந்தனர்.
அப்போது பனிக்கட்டிகளுக்கிடையே சடலம் ஒன்றை கண்டெடுத்த இவர்கள் பொலிசாருக்கு தகவலளித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், சடலத்தை பரிசோதித்ததில் இந்த உடல் கடந்த 1982ம் ஆண்டு மார்ச் மாதம் மலை ஏற்றத்தில் ஈடுபட்டுருந்த பாட்ரீஸ் ஹைவோட் (23) உடல் என உறுதி செய்துள்ளனர்.
இதுகுறித்து பொலிசார் கூறுகையில், 4100 அடி உயரத்தில் மலை ஏற்றத்தில் ஹைவோட் ஈடுபட்டுருந்த போது மோசமான வானிலை காரணமாக அவர் காணாமல் போயுள்ளார் என்றும் இவருடன் ஜீன் மார்க் பொவின் என்ற ஒருவர் இருந்தார் எனவும் தெரிவித்துள்ளனர்.





