மறைக்கப்படும் ஒபாமாவின் ரகசியங்கள்!!

567

Obama

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மற்றும் அவரது நிர்வாக அதிகாரிகளின் அட்டவணை ரகசியமாக பேணிக்காப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி ஒபாமா இந்த வார இறுதியில் கோலார்டோ மற்றும் டெக்செஸ் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஆனால் இது போன்ற திட்டமிட்ட வெளிநாட்டு சுற்று பயணங்களை ஊடகங்களுக்கு கடைசி நேரத்தில் மட்டுமே வெளியிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி என்பவர் தனிப்பட்ட சந்திப்புகளிலும் அல்லது சுற்றுப்பயணங்கள் மேற்கொள்வது வழக்கமான ஒன்றாகும்.
ஆனால் ஜனாதிபதி நாளின் மொத்த நிகழ்ச்சிகளை ஊடகங்களுக்கு தெரியப்படுத்தாமல் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

மேலும் ஜனாதிபதி மற்ற வெளிநாட்டு தலைவர்களுடன் உணவு உண்பதும், கோல்ப் மற்றும் உடற்பயிற்சி கூடத்திற்கு செல்லும் திட்டமிட்ட அட்டவணையும் கடைசி நேரத்தில் தான் வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.

வெள்ளை மாளிகை மற்றும் ஜனாதிபதி நிர்வாக அதிகாரிகள் பொறுப்பற்று செயல்படுவதாக பல ஊடகங்கள் கண்டனம் தெரிவித்துள்ளது.