கனடாவில் சொகுசுக் காரில் சடலமாக மீட்கப்பட்ட மாணவன் : குடும்பத்தினர் விடுத்துள்ள கோரிக்கை!!

429

கனடாவில் (Canada) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இந்தியாவை சேர்ந்த மாணவன் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சிராக் அன்டில் (Chirag Antil) என்ற அடையாளம் காணப்பட்ட உயிரிழந்த மாணவர் இந்தியா (India) – ஹரியானாவைச் (Haryana) சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

24 வயதுடைய சிராக் அன்டில் என்ற மாணவன் கனடாவின் வான்கூவரில் (Vancouver) கார் ஒன்றின் உள்ளே இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

எனினும் கொலையை செய்த நபர் மற்றும் கொலைக்கான காரணம் குறித்த தகவல்கள் பொலிஸார் வெளியிடவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசாங்கத்திடம் வேண்டுகோள்

கடந்த 2022 ஆம் ஆண்டு உயர் கல்விக்காக சிராக் கனடா சென்றுள்ளார். இந்நிலையில், சிராக்கின் உயிரிழப்புக்கு குடும்பத்தினர் நீதிகோரியுள்ளனர்.

மேலும், உடலை இறுதிச் சடங்குகளுக்காக சொந்த ஊருக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யுமாறும் இந்திய அரசாங்கத்திடம் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.