எனக்கு கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்ககூடாது : காதலியை கழுத்தை நெரித்துக் கொலை செய்த காதலன் பரபரப்பு வாக்குமூலம்!!

654

Besant

பெசன்ட் நகர் கடற்கரையில் இளம் பெண்ணை கொலை செய்த அவரது காதலன் ஏழுமலை பொலிஸில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த விஜயகுமாரின் 23 வயது மகள் நித்யா, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் துப்பரவு தொழிலாளியாக வேலை பார்த்துள்ளார்.

அதே மருத்துவமனையில் உள்ள டீ மாஸ்டராக இருந்த ஏழுமலையும் நித்யாவும் காதலித்துள்ளனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவில் பெசன்ட் நகர் கடற்கரையில் வைத்து நித்யாவின் கழுத்தை துப்பட்டாவால் இறுக்கி ஏழுமலை கொலை செய்துள்ளார்.

பின்னர் திண்டிவனம் அருகே முன்னூர் கிராமத்தில் தலைமறைவாக இருந்த ஏழுமலையை, காவல் துறையினர் சுற்றி வளைத்து பிடித்துள்ளனர்.

இதையடுத்து, காவல் துறையினரிடம் ஏழுமலை கொடுத்துள்ள வாக்கு மூலத்தில், நானும் நித்யாவும் 3 ஆண்டுகளாக காதலித்தோம்.

இந்நிலையில் நித்யா வேறொருவருடன் பழகுவதை அறிந்தபோது, என்னைத் தவிர வேறொருவருடன் பழகக்கூடாது என்று பலமுறை நித்யாவை எச்சரித்தேன். இதனால் நித்யாவுக்கும், எனக்கும் பலமுறை சண்டை ஏற்பட்டது.

நான் அவளுக்காக நான் நிறைய பணம் செலவு செய்ததோடு, சிம் கார்டு கூட வாங்கி கொடுத்துள்ளேன். ஆனால் வேறொருவரின் தொடர்பு கிடைத்ததும் நித்யா என்னை ஒதுக்கத் தொடங்கினாள்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையன்று இரவு பெசன்ட் நகர் கடற்கரையில் வழக்கமாக சந்திக்கும் இடத்தில் இருவரும் சந்தித்தபோது, நான் வாங்கி கொடுத்த சிம் கார்டை என்னிடம் திருப்பி கொடுத்துவிட்டு இனிமேல் என்னிடம் பேசாதே என்றாள்.

இதனால் ஏற்கெனவே ஆத்திரத்தில் இருந்தநான் அவளது பேச்சை கேட்டு மேலும் கோபம் அடைந்தேன். மேலும், எனக்கு கிடைக்காத நித்யா யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று அவளது கழுத்தை பிடித்து எனது கால்களுக்கு இடையில் வைத்து நெரித்தேன்.

பின்னர் அவளது துப்பட்டாவால் கழுத்தை இறுக்கினேன். இரண்டே நிமிடத்தில் அவள் இறந்து விட்டாள்.

மேலும் கொலை செய்த பின்னர் நித்யாவின் உடலை பார்த்து பயம் ஏற்பட்டதால் என்ன செய்வது என்று தெரியாமல் திண்டிவனத்தில் உள்ள எனது கிராமத்திற்கு வந்து விட்டேன் என்றும், பின்னர் பொலிஸார் என்னை பிடித்துவிட்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.