மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்து கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்த சோகம்!!

640

நாமக்கல் மாவட்டம் பரமத்தி சாலை கொங்கு நகரில் வசித்து வருபவர் 54 வயது மனோகரன் . இவர் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி அனிதா.

இவருக்கு 24 வயது மகன் ராகுல் இருந்தார். ஓமனில் பணிபுரிந்து வந்த இவர் ஏப்ரல் 11ம் தேதி நாமக்கல் வந்துள்ளார். இவரது பழைய வீட்டை புதுப்பிக்கும் யோசனையில் இருந்தார்.

அத்துடன் மகனை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பவும் முடிவு செய்யப்பட்ட நிலையில் அவருக்கும், அனிதாவுக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. வழக்கம் போல் ஏப்ரல் 12ம் தேதி இரவும் தகராறு, வாக்குவாதம் தொடர்ந்தது.

மகன் ராகுல் சந்தைப்பேட்டை புதூரில் உள்ள வீட்டிற்கு தூங்க சென்றுவிட்டான். காலை வீட்டிற்கு சென்ற ராகுல் அம்மாவைத் தேடியுள்ளார். அனிதா கழிவறையில் கழுத்து அறுக்கப்பட்டு கொலையான நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். மற்றொரு அறையில் என்ஜினீயர் மனோகரன் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் கிடந்தார்.

அதிர்ச்சி அடைந்த ராகுல், நாமக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப தகராறில் மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.