யாழில் மூடநம்பிக்கையால் உயிரிழந்த இளம் ஆசிரியை!!

1931

யாழ்ப்பாணத்தில் இளம் ஆசிரியை ஒருவர் வயிற்றோட்டத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார் இந்த சம்பவமானது நேற்று முன்தினம் (13.04.2024) இடம்பெற்றுள்ளது.

வண்ணார் பண்ணை – வடமேற்கு, ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த 37 வயதுடைய கோவிந்தசாமி கல்பனா என்ற, அராலி முருகமூர்த்தி பாடசாலையின் ஆங்கில ஆசிரியையே உயிரிழந்துள்ளார்.

குறித்த ஆசிரியைக்கு கடந்த 2016ஆம் ஆண்டு, லண்டனைச் சேர்ந்த ஒருவருடன் இந்தியாவில் திருமணம் நடைபெற்றுள்ளது. பின்னர் அவர் கணவனைப் பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் சுகயீனம் ஏற்பட்டதையடுத்து அவருக்கு மாந்திரீகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து அவரது தந்தையுடன் இளவாலை முள்ளானை தேவராச்சியத்தின் கிறிஸ்துவின் சபையில் கடந்த 05 ஆம் திகதி தொடக்கம் தங்கியுள்ளனர்.

இதனைதொடர்ந்து இவருக்கு கடந்த 12ம் திகதி வயிற்றுவலியும் வாந்தியும் ஏற்பட்டதையடுத்து போதகர் மூலம் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் (13) உயிரிழந்துள்ளார்.

மேலும் அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளதுடன் மரணத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டு சடலத்தை புதைக்குமாறு கூறி நேற்றையதினம் (14.04) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.