தனக்கு பிடித்த நடிகர்கள் பற்றி மனம் திறந்த திரிஷா!!

418

Trisha

வட அமெரிக்காவில் உள்ள தமிழ் சங்கங்கள் இணைந்து மிசௌரியில் கலை விழா நடத்தின. இதில் சிறப்பு விருந்தினராக திரிஷா அழைக்கப்பட்டு இருந்தார். விழா மேடையில் திரிஷாவிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் சரமாரி கேள்விகள் கேட்டனர்.

உங்களுடன் நடித்த கதாநாயகர்களில் யார் பொருத்தமான நடிகராக இருந்தார் என்பதை வரிசைபடுத்தி சொல்லுங்கள் என்று கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளிக்கையில் அஜித், சூர்யா, விக்ரம், கமல், விஜய் என்றார்.

பின்னர் ரசிகர்களிடம் திரிஷாவுக்கு பொருத்தமான கதாநாயகன் யார் என்று கேட்கப்பட்டது. அப்போது கூடி இருந்தவர்களில் ஒரு பகுதியினர் அஜித் என்று குரல் எழுப்பினர். இன்னும் ஒரு பகுதியினர் விஜய் என்று குரல் கொடுத்தார்கள்.