யாழில் பொலிஸ் அதிகாரிகளை வியப்பில் ஆழ்த்திய சிறுவன்!!

1204

யாழில் 6 வயதுடைய தமிழ் சிறுவன் சரளமாக சிங்களத்தில் உரையாற்றி பொலிஸ் அதிகாரிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளான்.

யாழ்.இந்துகல்லூரி ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்கும் சுதர்சன் அருணன் என்ற சிறுவனே இந்த உரையை நிகழ்த்தியுள்ளார்.

சித்திரவருட பிறப்பை முன்னிட்டு யாழ்.பொலிஸ் மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு இவ்வாறு உரையாற்றியுள்ளார்.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் உட்பட பல பொலிஸ் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.