தென்னாபிரிக்க அணியை 87 ஓட்டங்களால் வீழ்த்தியது இலங்கை அணி!!

480

SL

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி 87 ஓட்டங்களால் வெற்றி ​பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 267 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது. இலங்கை அணி சார்பாக டில்சான் 86 ஓட்டங்களையும் மஹேல 48 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 38.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 180 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.

தென்னாபிரிக்க அணி சார்பாக ஹசீம் அம்லா தனது 14 சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 101 ஓட்டங்களை எடுத்தார். இலங்கை அணி சார்பாக லசித் மலிங்க நான்கு விக்கெட்டுகளையும் டில்சான் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெற்றியை உறுதி செய்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக திலகரட்ன டில்சான் தெரிவு செய்யப்பட்டார்.