
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற பரபரப்பான இரண்டாவது அரை இறுதி போட்டியில் ஆஜெண்டினா, நெதர்லாந்தை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது.
முன்னதாக ஆட்டத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாதியில் இரு அணிகளும் மிக கடுமையாக போராடியும் கோல் ஏதும் அடிக்க முடியவில்லை இதனையடுத்து கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது.
இதிலும் கோல் அடிக்கபடாததால் பெனால்ட்டி வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதனை சரியாக பயன்படுத்திய ஆஜெண்டினா அணி 4-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியை அடுத்து இறுதிப் போட்டியில் ஜெர்மனியுடன் ஆஜெண்டினா மோதயுள்ளது குறிப்பிடத்தக்கது.





