வடமாகாண ஆளுநரின் பதவிக்காலம் நாளையுடன் முடிவு!!

571

Chandrasri

வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடையவுள்ளது.

இந்தநிலையில், புதிய ஆளுநராக யார் பொறுப்பேற்பார் என்ற அறிவிப்பு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்னமும் அறிவிக்கவில்லை.

13வது திருத்தச்சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாணசபைகளின் ஆளுநர் ஒருவரின் பதவிக்காலம், அவரது நியமன நாளில் இருந்து ஐந்து ஆண்டுகள் என்று இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

இதன்படி 2009ம் ஆண்டு ஜூலை 12ம் திகதி ஜனாதிபதி முன்பாக பதவியேற்ற, வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறி தனது 5 ஆண்டுப் பதவிக்காலத்தை நாளை – ஜுலை 11ம் திகதி நிறைவு செய்கிறார்.

இந்தநிலையில், புதிய ஆளுநர் ஒருவரை, நாளை மறுநாள் ஜனாதிபதி நியமிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், புதிய ஆளுநர் யார் என்ற விபரம் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.