பிரேசில் மக்களிடம் மன்னிப்பு கோரும் லூயில் ஸ்கொலரி : தோல்வியில் இருந்து மீளாத பிரேசில் ரசிகர்கள்!!

542

உலக கிண்ண அரையிறுதிப் போட்டியில் ஜேர்மனி அணியுடனான அடைந்த படுதோல்வி குறித்து பிரேசில் அணியின் தலைவரும் பயிற்றுவிப்பாளரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

அரையிறுதிப் போட்டியில் தமது அணி தோல்வியடைந்தமைக்கு தாம் பொறுப்பேற்பதாக பிரேசில் அணியின் பயிற்றுவிப்பாளர் லூயில் ஸ்கொலரி தெரிவித்துள்ளார். ஜேர்மனியுடனான போட்டியில் 7 -1 என்ற கணக்கில் பிரேசில் தோல்வியுற்று தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

இந்த நாள் என் வாழ்க்கையில் மிகவும் மோசமான நாளாக கருதுவதாக ஸ்கொலரி தெரிவித்துள்ளார். அத்துடன் பிரேசில் மக்களிடம் தாம் அடைந்த தோல்விக்காக அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.

இதேவேளை ஜேர்மனி அணியுடனான அரையிறுதிப் போட்டியில் தோல்வியுற்றமைக்கு தம் நாட்டு மக்களிடம் பிரேசில் கால்பந்தாட்ட அணித்தலைவர் டேவிட் லுயிஸ் மன்னிப்பு கோரியுள்ளார்.

இந்த தோல்வியானது தாம் மேலும் கற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்கி தந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகக்கிண்ண தொடரில் பிரேசில் அணி இது போன்ற கேவலமான தோல்வியை தழுவும் என ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை.
அரங்கம் முழுவதும் பிரேசில் ஆதரவாளர்கள் இருந்தாலும் உலகக்கிண்ண காற்று ஜேர்மனி பக்கம் தான் வீசியது. ஹிட்லரை விட பயங்கரமாக, அரக்கத்தனமாக ஆடிய ஜேர்மனியின் ஆட்டம் இன்னும் பல ஆண்டுகளுக்கு மறக்க முடியாதது.

அதை விட மோசம் பிரேசில் தடுமாறிய விதம். நெய்மர் இல்லாததாலும், ஜேர்மனியின் வியூகங்களைத் தகர்க்க முடியாலும் அது பரிதவித்ததை பார்த்து பரிதாபமாக இருந்தது.

இந்த அணியா 5 முறை சம்பியன் பட்டம் வென்றது என அனைவரும் வெறுத்துப் போய்விட்டனர். பிரேசில் பக்கம் ரசிகர்களின் கண்ணீர் ஆறு தான் ஓடிக்கொண்டிருக்கிறது. 94 ஆண்டுளில் இல்லாத இந்த மோசமான தோல்வியால் பிரேசில் ரசிகள் துவண்டு போய் உள்ளனர்.

1 2 3 4 5 6 7 8 9 10