ரஷ்யாவிடம் கெஞ்சும் ஸ்னோடென்!!

539

Stnotan

அமெரிக்க தேசிய உளவுத்துறையின் (சிஐஏ) முன்னாள் ஊழியர் எட்வட் ஸ்னோடென் தனது அடைக்கல காலத்தை நீட்டிக்க ரஷ்யாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள பிரபல உளவுத்துறையான சிஐஏவின் ஊழியராக ஸ்னோடென் (30) பணிபுரிந்து வந்தார். இவர் அமெரிக்க அரசு, ராணுவம் உள்ளிட்ட துறைகளின் ரகசியத் தகவல்கள் அடங்கிய சி.டி.க்களுடன் அந்நாட்டை விட்டு சில மாதங்களுக்கு முன் வெளியேறினார்.

மேலும் அவற்றை விக்கிலீக்ஸ் இணையதளம் மூலம் கசிய விட்டு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால் அமெரிக்க அரசாங்கம் அவர் மீது கடுமையான கோபத்தில் உள்ளது.

இந்நிலையில் கைது நடவடிக்கைகளில் இருந்து தப்பிய ஸ்னோடென் ரஷ்யாவில் தஞ்சம் புகுந்தபோது, அந்நாட்டு அரசாங்கம் அவருக்கு ஒராண்டு காலம் தங்குவதற்கான அனுமதியை வழங்கியது.

ஆனால் தற்போது அந்த அனுமதி காலம் இந்த மாதத்துடன் முடிவடைவதால் தனது அடைக்கல காலத்தை நீட்டிக்க கோரி அந்நாட்டு புலம்பெயர்வு பிரிவு அதிகாரிகளிடம் ஸ்னோடென் விண்ணப்பித்துள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.