
கர்நாடகாவின் பொது தேர்தலில் தோல்வியை தழுவிய நடிகை ரம்யா தற்போது திரைப்படத்துறைக்கு வருகை தந்துள்ளார்.
கன்னட திரையுலகத்தில் முத்திரை பதித்த நடிகை ரம்யா, தமிழில் குத்து என்ற படத்தில் அறிமுகமாகி, அதை தொடர்ந்து வாரணம் ஆயிரம், பொல்லாதவன், கிரி உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
அரசியலில் ஈடுபட்டஇவர் கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது மண்டியா லோக்சபா தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
மேலும் நாடாளுமன்றத்தின் இளம் பெண் எம்.பி. என்ற பெருமையை பெற்ற ரம்யா சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதே மண்டியா தொகுதியில் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ரம்யா தனது தோல்விக்கு நடிகர் அம்பரீசின் ஆதரவாளர்களே காரணம் என்றும் தன்னை வீழ்த்த உள்குத்து செயல்களில் அவர்களே ஈடுபட்டுள்ளனர் எனவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் தன் அரசியல் வாழ்க்கையால் திரையுலகை நிராகரித்து வந்த அவர் தற்போது தோல்வியடைந்ததால் மீண்டும் நடிகவே செல்ல திட்டமிட்டுள்ளார்.





