திருமலையில் 12 வயதுச் சிறுமியை கடத்திச் சென்று துஸ்பிரயோகம் செய்த நபர் கைது!!

553

Abuse

திருகோணமலை கிண்ணியா சம்மாவஜ்ஜதீவு பகுதியிலுள்ள 12 வயது சிறுமியை கடத்தி சென்று துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தின் பின்னர் சந்தேகநபர் தலைமறைவாகியிருந்த நிலையில், நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

12 வயதான சிறுமியை தம்பலகாமம் பகுதிக்கு கடத்தி சென்று கடந்த 03ஆம் திகதி துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, சிறுமி 05 ஆம் திகதி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட சிறுமி, சட்ட மருத்துவ அதிகாரியின் சான்றிதழை பெறுவதற்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பில் கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.