கனடாவில் பெண் ஒருவர் தனக்கு பிறந்த 6 குழந்தைகளை கடந்த காலங்களில் தொடர்ந்து கொலை செய்துள்ளார். இப்பெண் போதை மருந்திற்கு அடிமையாகியதால் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்புக்களை சமாளிக்க விரும்பாத காரணத்தினால் இவ்வாறு செய்துள்ளார் என கூறப்படுகின்றது.
தனது 6 பிறந்த குழந்தைகளையும் கொன்று அவர்களது உடல்களை கராஜில் சேமித்து வைத்ததாக இப்பெண் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
39 வயதுடைய மெகன் ஹன்ஸ்மன் என்ற இப்பெண் மெத் எனப்படும் போதை மருந்திற்கு தீவிரமான முறையில் அடிமையாகி இருந்த காரணத்தால் 1996 தொடக்கம் 2006 வரையிலான காலப்பகுதியில் பிறந்த 6 குழந்கைளையும் கழுத்தை நெரித்தும் மூச்சுத்திணற வைத்தும் கொலை செய்துள்ளார் என பொலிஸ் கப்டன் மைக் றொபேட்ஸ் அதிகாரி செவ்வாய்கிழமை அசோசியேட்டட் பிரஸ்சிற்கு தெரிவித்துள்ளார்.
முதல் தடவையாக இக்கொலைகளிற்கான சந்தேகத்திற்கிடமான நோக்கம் திங்கள் கிழமை வெளிவந்த பின்னர் பொலிசார் இச்செய்தியை தெரிவித்துள்ளனர்.
இப் பெண் பிள்ளைகளின் ஆரோக்கியத்தை பற்றி கவலை கொள்ளவில்லை. அவர்களை பராமரிக்கவும் விரும்பவில்லை எனவும் அதிகாரி கூறியுள்ளார்.
மேகனின் கராஜில் கண்டெடுக்கப்பட்டுள்ள 7வது குழந்தை இறந்து பிறந்திருக்கலாமென அதிகாரிகள் கருதுகின்றனர். இப்பெண் 6 மில்லியன் டொலர்கள் ஜாமினில் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். இவர் மீது 6 கொலை குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளது.






