பேஸ்புக்கில் லைக் வாங்க 11 மாத குழந்தையை கொன்ற தாய்!!

572

Fb like

அமெரிக்காவில் ஒரு தாய் தனது 11 மாத குழந்தையை கொலை செய்து பேஸ்புக்கில் பிணத்தின் படத்தை போட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நியூயொர்க்கின் குயின்ஸ் பகுதியை சேர்ந்த நிகோலி நிக்கி கெல்லி (23) மீது, குழந்தையை கொலை செய்ததாக வழக்குப்பதிவு செய்து பொலிசார் கைது செய்துள்ளனர்.

இதுபற்றி பொலிசார் கூறுகையில், கணவரை பிரிந்து வாழும் நிக்கி கெல்லிக்கு , ஜியாம் பெலிக்ஸ் என்ற 11 மாத ஆண் குழந்தை உள்ளது.

சுகாதார உதவியாளராக பணியாற்றிவந்த அவர், குழந்தை பெலிக்ஸை படுக்கை விரிப்பை கொண்டு முகத்தை போர்த்தி மூச்சு திணறவைத்து கொலை செய்துள்ளார்.

இதையடுத்து இறந்த தனது மகனின் உடலை புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் பதிவேற்றி, எனது ஆண்குழந்தையை இழந்துவிட்டேன், உங்களுடைய வாழ்த்துக்கள் என்னை அவனது மறுபடியும் என்னுடைய வாழ்க்கைக்கு அழைத்துவரும் என நம்புகிறேன்.

மேலும் நான் அவன் இறந்ததை மிகவும் பயங்கரமாக நினைகிறேன் என்றும், அவனது ஆவி எப்போதும் என்னை சுற்றி இருக்கும் எனவும் நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.