வட்ஸ் அப் மேல் மோகம் கொண்ட காதலியை கொலை செய்த காதலன்!!

1193

Whatsapp

மும்பையில் தன் காதலி தொடர்ந்து வட்ஸ் அப் தொடர்பில் இருந்ததால் காதலனே கொலை செய்து குப்பை தொட்டில் வீசியுள்ளார்.

பொலிசார் இதுகுறித்து கூறுகையில், அந்த வழக்கில் தற்போது போலீசார் குற்றவாளியை கைது செய்து உள்ளனர்.மொபைல் வட்ஸ் அப்பில் வேறு ஒரு காதலருடன் பேசி கொண்டு இருந்த்தால் மற்றொரு காதலர் காதலியை கொலை செய்து உடலை சூட்கேசில் அடைத்து வீசி உள்ளார்.

லதூர் ஜாத்கல் வஸ்தி கோர்பதியை சேர்ந்த பிரசாந்த் ஜீவன் (23) ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த அனுராதா (21) என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.

அனுராதா அடிக்கடி கைப்பேசியில் உள்ள வட்ஸ் அப் மெசஞ்சரில் எப்போதும் பேசிக்கொண்டே இருப்பார். இது குறித்து காதலர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு வந்துள்ளது.

அனுராதா வேறு ஒரு காதலருடன் பேசுவதாக சந்தேகம் அடைந்த பிரசாந்த் அடிக்கடி சண்டை போட்டதோடு, அனுராதா வேலை பார்க்கும் கடைக்கும் சென்று தகராறு செய்துள்ளார்.

இதையடுத்து கடந்த மாதம் 28ம் திகதி அனுராதா வீட்டிற்கு சென்று சண்டைபோட்ட போது சண்டை முற்றியதில் அனுராதாவை கொலை செய்து ஒரு பெட்டியில் அடைத்து தனது ஆட்டோவிலேயே வைத்து கராடி பகுதியில் உள்ள ஒரு குப்பை தொட்டியில் வீசியுள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.