முல்லைத்தீவில் கடலில் நீராடச் சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!!

483

முல்லைத்தீவு – நாயாறு கடலில் நீராடச் சென்று மூழ்கிய இருவரில் ஒருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு நாயாறு கடலில் 5 பேர் கொண்ட இளைஞர் குழுவினர் நேற்றையதினம் (28-04-2024) மாலை நீராடிக் கொண்டிருந்துள்ளார்கள்.

இதன்போது ஒரு இளைஞனை கடலில் நீர் இழுத்துச் சென்றுள்ளதை தொடர்ந்து காப்பாற்ற முற்பட்ட மற்றொரு இளைஞன் நீரில் மூழ்கியுள்ளார்.

இதனையடுத்து, நாயாறு கடற்படையினரின் உதவியுடன் ஒரு இளைஞன் உயிருடன் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்,

மற்றைய இளைஞன் கடலில் மூழ்கிய நிலையில் அவரைத் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட நிலையில், நீரில் மூழ்கியவரின் சடலம் இன்று கரை ஒதுங்கியுள்ளது.

மீசாலை வடக்கு கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே நீரில் மூழ்கி உயிரிழந்தவராவார்.

இதேவேளை, குறித்த பகுதி நீராடுவதற்கு ஆபத்தான பகுதி என அறிவித்தல் பலகையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை விட பிரதேசவாசிகளும் குறித்த கடற்கரைக்கு வருபவர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கிய போதிலும் அது செவிமடுக்கப்படாமல் தொடர்ந்து உயிரிழப்புக்கள் இடம்பெற்று வருவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.