“சரிகமப” நிகழ்ச்சியில் சாதிக்கும் வேகத்தில் கழிவறையில் 3 நாட்கள் தூங்கிய இலங்கை இளைஞனின் சோகக் கதை!!

1191

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் “சரிகமப” நிகழ்ச்சியில் கலந்து பாடும் நிலா பாலு என்று அன்போடு அழைக்கப்பட்டு ஓடிசனில் தேர்வான இந்திரஜித் எங்கு தங்குவது என்று தெரியாது சென்னை பேரூந்து நிலைய கழிவறையில் தூங்கி அன்றாட கடமைகளை முடித்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

“சரிகமப” நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு பதுளை மாவட்டம் பூனாகலையை சேர்ந்த இந்திரஜித்திற்கு கிடைத்திருக்கும் நிலையில் நேற்று அவர் பாடிய முதல் பாடல் ஒளிபரப்பானது.

பாடும் நிலா பாலு என்று அன்போடு அழைக்கப்பட்ட, மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் பாடலை தெரிவு செய்து அவர் பாடியிருந்தார்.

பாடி முடிந்த பிறகு நடுவர்களின் பாராட்டை இந்திரஜித் பெற்று அரங்கத்தினை நெகிழ்ச்சியில் மூழ்க வைத்திருந்தார். பிறகு அவர் எப்படி இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு வந்தார் என்று உருக்கமாக பேசினார்.

உருக வைத்த இந்திரஜித் அதில், நான் இலங்கையில் பதுளை மாவட்டத்தில் இருந்து வருகிறேன். அங்கு ஓட்டல் ஒன்று வேலை செய்து சம்பாதித்த பணத்தில் சென்னை வருவதற்காக டிக்கட்டுகளை பெற்றேன்.

ஓடிசனில் தேர்வான எனக்கு எங்கு தங்குவது என்று தெரியவில்லை. இசை பயணத்தினை தொடர வேண்டும் என்று மூன்று நாட்களாக சென்னை பேரூந்து நிலையத்தில் தங்கி கழிவறையில் தூங்கி அன்றாட கடமைகளை முடித்தேன்.

பிறகு “சரிகமப” மேடையில் எனக்கு வாழ்க்கை வாய்ப்பு கொடுத்துள்ளது. நிச்சயம் வெற்றியுடன் தான் நாடு திரும்புவேன் என்று உருக்கமாக பேசியுள்ளார்.