வெளிநாடுகளின் அனுதாபம் தேவையில்லை: நிமிர்ந்து நிற்கும் நாடாக இலங்கை உருவாகியுள்ளது : ஜனாதிபதி!!

547

Mahinda

வெளிநாடுகளின் அனுராபத்தை கோரிய காலம் முடிவடைந்து விட்டதாகவும், அனுதாபத்தை எதிர்பார்த்த, அனுதாபம் கோரிய காலம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தற்போது பெருமிதத்துடன் நிமிர்ந்து நிற்கும் நாடாக இலங்கை உருவாகியுள்ளது எனக் கூறியுள்ளார்.

தோல்வியடைந்த நாடுகளைப் போன்று எவரின் அனுதாபத்தையும் கோரி நிற்க வேண்டிய அவசியமில்லை. நாட்டை நேசிக்கும் ஒர் மாணவர் சமுதாயத்தை உருவாக்க வேண்டும். நாடு பற்றி பெருமிதத்துடன் பேசக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கொழும்பு றோயல் கல்லூரியில் நேற்று நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பங்கேற்று உரையாற்றிய போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.